green
merron
blue
brown
Blue

You are here

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
Year : 2022
அரசாணை (நிலை) எண்.8 Dt: May 19, 2022   Download Icon 566KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் வசிக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 614 இல்லவாசிகள் - காலணிகள் வாங்கி வழங்கும் திட்டம் - 2022-2023ஆம் நிதியாண்டில் செலவினம் மேற்கொள்ள அனுமதி அளித்து - ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.7 Dt: May 18, 2022   Download Icon 153KBமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் மற்றும் சிறப்பு கல்வியாளர்களுக்கு மாதந்திர மதிப்பூதியம் ரூ.14,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்குதல்
அரசாணை (நிலை) எண்.6 Dt: May 16, 2022   Download Icon 494KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அறிவிப்புகள் - 2022-2023 - 22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக சோப்பு. தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூ.30 லிருந்து ரூ.50ஆக உயர்த்தி வழங்குவது
அரசாணை (ப) எண்.15 Dt: April 22, 2022   Download Icon 609KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை – அரசு மறுவாழ்வு இல்லங்களில் உள்ள இல்லவாசிகளுக்கு மழை மற்றும் குளிர் காலங்களில் பயன்படுத்த போர்வைகள் வாங்கி வழங்குதல் – அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.5 Dt: March 21, 2022   Download Icon 166KBமாற்றுத்திறனாளிகள் நலத்துறை - மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க அகில இந்திய பணிகள் மற்றும் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-I முதல் நிலைத்தேர்வில் வெற்றி பெறும் மாணவ/மாணவிகளுக்கு முதன்மைத்தேர்வு எழுத நிதியுதவி அளித்தல் - 2021-2022-ஆம் ஆண்டிற்கு ரூ 19,50,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(D) No.9 Dt: March 21, 2022   Download Icon 2MBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை – முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் – செப்டம்பர் 2021 – காத்திருப்போர் பட்டியலில் உள்ள 144 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்க நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 07 Dt: March 16, 2022   Download Icon 3MBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – 2021-2022 - பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் பாதிப்படைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் வழங்கும் திட்டம் - 8000 எண்ணிக்கையிலான திறன்பேசிகள் ஒன்றின் விலை ரூ 12,500/- என்ற மதிப்பில் ஒப்பந்தப்புள்ளியில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நிகழ்விற்கு பின்னேற்பு ஆணையும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் மீதமிருக்கும் 704 பயனாளிகளுக்கு திறன்பேசிகள் வழங்கிட கூடுதல் நிதி ஒதுக்கீடும் வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது
G.O. (D) No.01 Dt: February 16, 2022   Download Icon 2MBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை – 2021–2022 ஆம் நிதியாண்டு ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் கல்வி பயிலும் மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகள் (Corner Seat) வழங்குதல் – அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.01 Dt: January 07, 2022   Download Icon 2MBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்களின் வகை மற்றும் மாதிரியில் தேர்வினை (Choice Based) வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டம் – முதற்கட்டமாக 5 உதவி உபகரணங்களுக்கு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது
Year : 2021
G.O.(D) No.36 Dt: December 08, 2021   Download Icon 2MBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை – அதிக உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் (High Support Need) – 2019–2020-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட 856 கூடுதல் பயனாளிகள் ஒரு உதவியாளரை வைத்து தங்களை பராமரித்துக் கொள்ள ஏதுவாக மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O. (D) No.34 Dt: December 06, 2021   Download Icon 2MBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை – பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் பாதிப்படைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் வழங்குதல் – நிதி ஒப்பளிப்பு – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.11 Dt: October 26, 2021   Download Icon 3MBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை – பணியமைப்பு – புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் தோற்றுவிப்பது - பணியிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 28 Dt: October 04, 2021   Download Icon 2MBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை – காத்திருப்போர் பட்டியலில் உள்ள 2089 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்க தேவைப்படும் நிதி ரூ.1,88,01,000/- செலவு செய்ய அனுமதி அளித்து - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 09 Dt: September 29, 2021   Download Icon 2MBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- பிறருடன் பேசித் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உள்ள, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட, புற உலக சிந்தனை இல்லாத மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாற்று வழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் கூடிய உபகரணம் (AVAZ) 300 எண்ணிக்கையில் வாங்கி வழங்குதல் – நிதி ஒப்பளிப்பு – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.24 Dt: September 11, 2021   Download Icon 2MBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – 2021ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் நடைபெற உள்ள 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கான துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிவரும் கோவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 20 Dt: July 28, 2021   Download Icon 896KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அதிக உதவி தேவைப்படும் (High Support Need) மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள உதவித்தொகை வழங்கும் திட்டம் - 2021-2022ம் நிதியாண்டிற்கு திட்ட தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O (D). No. 19 Dt: July 23, 2021   Download Icon 2MBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - பார்வைத்திறன் குறையுடையோர் எளிதில் பிரெய்லி முறையில் கற்பதற்கு ஏதுவாக மின்னணு வடிவில் உள்ள புத்தகங்களை தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி (Electronic Braille Reader) - 204 பயனாளிகளுக்கு வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.05 Dt: July 22, 2021   Download Icon 2MBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் உள்ள அனைத்து மாவட்ட நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனங்களில் பணியாற்றும் ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தொகுப்பூதியத்தினை முறையே ரூ.10,000/- லிருந்து ரூ.12,000/- மற்றும் ரூ.5000/- லிருந்து ரூ.8,000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.4 Dt: July 14, 2021   Download Icon 4MBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை – பணியமைப்பு – காஞ்சிரம் மாவட்டம் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்துர் மாவட்டங்களில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்கள் தோற்றுவிப்பது - பணியிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O (Ms) No.03 Dt: July 07, 2021   Download Icon 2MBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பயணம் செய்யும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவில் பழைய உறுப்பினர்களுக்கு பதிலாக புதிதாக இரண்டு உறுப்பினர்களை சேர்த்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.