green
merron
blue
brown
Blue

You are here

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை
Year : 2023
அரசாணை (நிலை) எண்.52 Dt: July 25, 2023   Download Icon 116KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு (மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் தவிர) வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தினை ரூ.1,000/-லிருந்து ரூ.1,200/-ஆக ஆகஸ்ட், 2023 முதல் உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.33 Dt: June 07, 2023   Download Icon 5MBசமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள் (மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி) மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப்பள்ளி (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) மாணவ மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 2023-24 ஆம் ஆண்டு முதல் விரிவுபடுத்துதல் – ஆணை – வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.27 Dt: May 15, 2023   Download Icon 3MBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – அங்கன்வாடிப் பணிகள் – குழந்தைகள் மையங்களில் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது குழந்தைகள் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் – அனுமதி அளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms)No.01, Dt: January 13, 2023   Download Icon 3MBசமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக) கூடுதலாக 433 மாநகராட்சி/நகராட்சி அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை விரிவுபடுத்துதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
Year : 2022
G.O.(Ms) No.86 Dt: December 31, 2022   Download Icon 259KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை- மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தினை ரூ.1,000/-லிருந்து ரூ.1,500/-ஆக உயர்த்துதல் - 2022-2023ஆம் ஆண்டில் ரூ.65,89,72,500/-க்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O (MS)No.56 Dt: September 02, 2022   Download Icon 502KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை – “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” அமைத்தல் மற்றும் தமிழ்நாடு மாநில சமூக நல வாரியத்தின் செயல்பாடுகளை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைத்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.53 Dt: August 23, 2022   Download Icon 161KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - குழந்தைகள் மையங்களில் முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு ரூ.1.25 விலையில் வாங்கி வழங்கப்பட்டு வரும் வாழைப்பழத்தின் விலையினை ரூ.3.50 ஆக உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O. (Ms) No.47 Dt: August 02, 2022   Download Icon 115KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - அங்கன்வாடிப் பணிகள் – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இயங்கும் குழந்தைகள் மையங்களில் அங்கன்வாடிப் பணியாளர் பணியிடங்களை உரிய தகுதிகள் பெற்ற 5 ஆண்டுகள் பணி முடித்த குறு அங்கன்வாடிப் பணியாளர்களைக் கொண்டு நிரப்புதல் – ஆணையிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.44 Dt: July 29, 2022   Download Icon 90KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - குழந்தைகள் நலம் – மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறும் மாநில அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பதற்காக 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms)No.43 Dt: July 27, 2022   Download Icon 6MBசமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில், விதி எண். 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு - அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்குதல் –முதற்கட்டமாக செயல்படுத்துதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.31 Dt: June 10, 2022   Download Icon 132KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - அங்கன்வாடிப் பணிகள் – கருணை அடிப்படையில் பணிநியமனம் - குழந்தைகள் மையங்களில் பணிபுரிந்து வருகையில் பணியிடைக்காலமான குறுஅங்கன்வாடிப் பணியாளர்/அங்கன்வாடி உதவியாளர்களின் தகுதி பெற்ற பெண் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடிப் பணியாளராக பணிநியமனம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2021
G.O.(Ms) No.87 Dt: December 02, 2021   Download Icon 108KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் - குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்களின் வயது முதிர்வில் பணி ஓய்வு பெறும் வயதினை (Retirement age on superannuation) 58-லிருந்து 60-ஆக (Completion of 60 years) உயர்த்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.79 Dt: November 09, 2021   Download Icon 109KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள முதன்மை அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில், 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரை கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O. (Ms) No.79 Dt: November 09, 2021   Download Icon 109KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள முதன்மை அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில், 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரை கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்புதல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms. No. 63 Dt: October 08, 2021   Download Icon 785KBசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் – சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் – வயது முதிர்வில் பணி ஓய்வு பெறும் வயதினை (Retirement age on superannuation) 58 லிருந்து 60 ஆக (Completion of 60 years) உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.21 Dt: June 03, 2021   Download Icon 98KBசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - மூன்றாம் பாலினர் நலன் - அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White Board), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மூன்றாம் பாலினரும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதித்து ஆணைகள் – வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.19 Dt: May 07, 2021   Download Icon 2MBசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (white board) கட்டணமில்லா பயண வசதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2020
O.O. No.01 Dt: January 03, 2020   Download Icon 66KBதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் மேல்முறையீட்டு அலுவலர்கள் - பொது தகவல் அலுவலர்கள் நியமனம் - செய்வது தொடர்பாக.
Year : 2019
அரசாணை (நிலை) எண்.41 Dt: August 29, 2019   Download Icon 118KBபணியமைப்பு - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை-அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்களாகப் பணிபுரிந்து 01.04.2003 தேதிக்குப் பின்னர் ஊர் நல அலுவலர்கள் / மேற்பார்வையாளர்கள் (நிலை-2), ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் - மாத சிறப்பு ஓய்வூதியம் ரூ.2,000/- வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2018
G.O.(Ms) No.36 Dt: April 10, 2018   Download Icon 91KBசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை – அங்கன்வாடி மையப் பணிகள் - அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாற்று ஏற்பாடுடன் உணவூட்டும் பணிகளை மேற்கொள்வது - கோடை விடுமுறை வழங்குவது – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன