15ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இன்றைய ராமநாதபுர மாவட்டம் திருவாதனை, பரமகுடி, கமுதி, முதுகுலத்தார், ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் எனும் ஐந்து தாலுக்களாக பிரிக்கப்பட்டு பாண்டியர்களால் ஆளப்பட்டது. 1520க்கு பிறகு விஜயநகர நாயக்கர்கள் இந்தப் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் இரண்டு நூற்றாண்டுகள் நாயக்கர்களால் ஆளப்பட்ட, 18ம் நூற்றாண்டில் மறவர்கள் வசம் வந்து அவர்களது குடும்ப உறுப்பினர்களால் சிறு சிறு பகுதிகளாக ஆளப்பட்டது. 1740களில் இந்த பகுதி நவாப்களின் வசம் வந்தாலும், உள்ளூர் தலைவர்கள் மற்றும் நிலக்கிழார்கள் அவர்களின் ஆட்சியில் பற்று கொள்ளாமல் நாயக்கர்களை தலைவர்களாக அறிவித்தனர். இருப்பினும் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் சந்த் சாகிப்பையும், முகமது அலியையும் ஆதரித்த காரணத்தால், தென் பகுதியில் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
ராமநாத சுவாமி ஆலயம், பத்ரகாளி அம்மன் கோயில், கோதண்டராமசாமி கோயில், சக்தி வரஹனுமன் கோயில், உத்திரகோசமங்கை கோயில், ஐந்து முக ஹனுமன் கோயில், வேயுலகாந்த விநாயகர் கோயில் ஆகிய கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.