புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி மற்றும் தஞ்சாவூரிலிருந்து ஜனவரி, 14 1974ல் பிரிக்கப்பட்டது. இது 2 வருவாய் பிரிவுகளாகவும், 9 தாலுகாவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 765 கிராம நிர்வாகங்களையும் கொண்டுள்ளது. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களால் ஆளப்பட்ட இந்த பகுதி, வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்களையும் அதிகளவில் கொண்டதாக இருந்துள்ளது.
சிற்பங்கள் நிறைந்த ஆவுடையார் கோயிலும், ஸ்ரீ குகனேஸ்வரர் பிரகதாம்பாள் கோயிலும் பாரம்பரியம்மிக்கது. புதுக்கோட்டை அருங்காட்சியகம் பல்வேறு விதமான வெண்கல சிற்பங்களின் தொகுப்புடனும், பல்வேறு அறிய சேகரிப்புகளுடனும் பார்ப்பவரை வியக்க வைக்கிறது. மலை குகை கோயில், சிகாகிரிஸ்வரர் கோயில், மற்றும் சுப்பிரமணியர் திருக்கோயில்களும் தொன்மை வாய்ந்த கோயில்களாக விளங்குகின்றன.