1741ஆம் ஆண்டு மராத்தியர்கள் திருச்சியை கைப்பற்றி சந்தா சாஹிப்பை கைதியாக்கினர். இருப்பினும், 1748ஆம் ஆண்டு விடுதலை பெற்று நவாப்புடன் போரில் ஈடுபட்டான். அதன் பின்னர் நவாப்பின் மைந்தனான முகமது அலி உடையர்பாளையம் மற்றும் அரியலூரை இணைத்து கொண்டு யூசப்கானின் இயக்கத்தை அடக்க முற்பட்டான். 1764 நவம்பரில் இந்த விவகாரத்தை மெட்ராஸ் கவுன்சிலிடம் அறிவித்து ராணுவ உதவியையும் பெற்றுக்கொண்டான். இந்த ராணுவ உதவி மூலம் பாளையங்களை தன்னோடு இணைத்துக் கொண்டு ஆற்காடு முதல் திருச்சி வரை தன்னுடைய ஆட்சிப் பகுதியை விரிவாக்கிக் கொண்டான்.
ராஜன்குடி கோட்டை பெரம்பலூரின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம் ஆகும். இதற்கு ஆண்டு முழுவதும் நாடு முழுவதிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இது தவிர பல்வேறு கோயில்களும் உள்ளன. திருவாசூர் மதுர காளியம்மன் கோயில் மிகமுக்கியமான வழிபாட்டுத்தலமாக விளங்குகின்றது. பங்குனி மாத கடைசியில் நடைபெறும் வருடாந்திர விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. சித்திரை முதல் வாரத்தில் தேரோட்ட விழாவும் நடைபெறும். இது தவிர செட்டிக்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஏகாம்பரேசுவரர் மற்றும் தண்டாயுதபாணி கோயில்களையும் கொண்டுள்ளது. இவை குலசேகர பாண்டிய மன்னரால் 800 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவையாகும்.