விருதுநகர் மாவட்ட மக்கள் தெய்வ வழிபாடுகளில் அதிகம் ஆர்வமுள்ளவர்கள். இங்கு தைத்திருநாள், ஆடிப்பெருக்கு, கார்த்திகை தீபம், தேர் திருவிழா ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் தேர் தமிழகத்தின் இரண்டாவது மிகப் பெரிய தேர் ஆகும். இதன் உயரம் சுமார் 75 அடி. இங்கு ஆண்டாள் பிறந்ததால் மார்கழி மாதம் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மாரியம்மன், சகினாச்சியர் கோவில் விழாக்கள் சாத்தூர் வட்டத்தில் சிறப்பாக நடைபெறும்.
கி.பி.1922ம் ஆண்டு திரு.அய்ய நாடார் மற்றும் திரு.சண்முக நாடார் இருவரும் கல்கத்தா சென்று பாதுகாப்பான தீப்பெட்டி தயாரிப்பை கற்று சிவகாசி வந்து 1923ல் தீப்பெட்டி தொழிற்சாலையை தொடங்கினார்கள். இங்கு தயாரிக்கும் பட்டாசுகள் உலகப் புகழ் பெற்றவை.
Tamil
காமராஜர் நினைவு இல்லம், விருதுநகர் ஆண்டாள் கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூர் பூமிநாதர் கோவில், ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்த இடம், திருச்சுழி. அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சி - இராஜபாளையம், செண்பக தோப்பு - ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆகியவை சுற்றுலாத்தலங்களாக உள்ளன..