திருவண்ணாமலை சமயச்சார்புடைய புனிதத்தன்மை கொண்ட இடமான அருணாச்சலலேஸ்வரர் புனித தலம் மற்றும் ஆசிரமங்கள் உள்ளன. இந்த மாவட்டம் வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து செப்டம்பர் 30, 1989ம் ஆண்டு பிரிக்கப்பட்டது.
இந்த மாவட்டம் வடக்கு மற்றும் மேற்கில் வேலூர் மாவட்டத்தையும், தென்மேற்கில் தர்மபுரி மாவட்டத்தையும், தெற்கில் விழுப்புரம் மற்றும் கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது.
ஸ்ரீ அருணாச்சலலேஸவரர் கோவில், திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள இரமண ஆசிரமம், சேஷத்திரி ஆசிரமம், ராம்சூரத் குமார் யோகி ஆசிரமம், தண்டராம்பேட்டையில் சாத்தனூர் அணை, சேத்துப்பட்டு திருமலையில் சமணர் கோயில், வந்தவாசியில் ஸ்ரீ பாண்டுரங்கன் கோயில் ஆகியவை சுற்றுலாத்தலமாக உள்ளன.