திருநெல்வேலி தமிழகத்தின் தெற்கில் இறுதியிலிருந்து இரண்டாவதாக உள்ளது. இது தமிழகத்தின் அண்டத்தின் நுண்மாதிரிப் படிவ மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டம் புவியியல் அமைப்பில் உள்ள மலை, ஆறு, நீர்வீழ்ச்சி, கடல் மற்றும் சமவெளியை கொண்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தமிழ் மொழிக்கு பெருமைக்குரியதாகவுள்ளது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலை, பொதிகை மலை மற்றும் குற்றாலம் நீர்வீழ்ச்சி மிகச் சிறப்பானது. தமிழ் இலக்கியத்தில் உள்ள ஐந்திணை நிலங்கள் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், மற்றும் பாலை இங்கு அமையப்பெற்றுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால நீர்வீழ்ச்சி மிகவும் புகழ் பெற்றது. இந்த நீர்வீழ்ச்சி காடுகளையும், மருத்துவ செடிகளையும் கடந்து வருவதால் இது மூலிகை நிறைந்த நீர்வீழ்ச்சி.
பாபநாசம் அகஸ்தியர் நீர் வீழ்ச்சியும் மிக சிறந்த சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள முண்டன்துறை விலங்குகள் சரணாலயத்தில் புள்ளி மான்கள், அரியவகை சிங்கவால் குரங்கு, யானை மற்றும் புலிகள் காப்பகம் உள்ளது.