திருச்சி சோழர் காலத்தில் உறையூர் என்ற பெயரில் அழைக்கப் பெற்றது. கி.மு.300 ஆண்டு முதல் இது சோழர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. உறையூர் (திருச்சி) பல காலகட்டங்களில் பல பேரரசுகளால் ஆளப்பட்டுள்ளது. கி.பி.590 முதல் 880 வரை முதலாவது மகேந்திர பல்லவன் மற்றும் பாண்டிய மன்னார்களால் ஆளப்பட்டுள்ளது. பின்பு கி.பி.880 முதல் கி.பி.1225 வரை சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்துள்ளது.
பின்பு 18ம் நூற்றாண்டுகளில் இது விஜயநகர பேரரசு மற்றும் நாயக்கர் மன்னர்களால் ஆளப்பட்டது. இப்பொழுதுள்ள தெப்பக்குளம் மற்றும் கோட்டை விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டது.
திருச்சியை சில ஆண்டுகள் முகலாயர்கள் ஆட்சி செய்துள்ளனர். சந்தா சோயப் மற்றும் முகமது அலி ஆகியோர் ஆட்சி செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சுமார் 150 ஆண்டுகள் ஆங்கிலேய அரசு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
திருச்சியின் சிறப்புமிக்க இடமாக இருப்பது திருச்சி மலைக்கோட்டை. ஸ்ரீரங்கம் கோவில், காவேரி ஆறு மற்றும் திருவணை கோவில் ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது.