திப்பு சுல்தான் ஆண்ட திண்டுக்கல் சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் துணை சாம்ராஜ்ஜியமாகவும் விளங்குகின்றது. பழமை வாய்ந்த மலைக்கோட்டை முத்துகிருஷ்ணப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் 15.09.1985 அன்று பிரிக்கப்பட்டது. திண்டுக்கல் அண்ணா, காயிதமில்லத் மற்றும் மன்னர் திருமலை ஆகியோரால் பெயர் பெற்றது. அமராவதி, மஞ்சள் ஆறு, குதிரையாறு, மருதநதி ஆகியவை இங்கு முக்கியமான நதிகளாக கருதப்படுகிறது.
பழனி மலை முருகன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. பேகம்பூர் மசூதி, சிறுமலை, பரப்பளர் அணை, வராதமனதி அணை, மாரியம்மன் கோவில் மற்றும் நடுப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் ஆகியவை முக்கிய இடங்களாக உள்ளன. கொடைக்கானல் மலைத்தொடர் மற்றும் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிமலரும் அற்புதமான சுற்றுலா பயண இன்பத்தை தருகின்றது.