இந்த மாவட்டத்தில் எழுத்தறிவு விகிதம் அதிகளவில் உள்ளது. 1,245 ஆரம்ப பள்ளிகளும், ஒன்பது ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் உண்டு. இங்கு ஒரு பல்கலைக்கழகம் அதனை சார்ந்த எட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் உண்டு. மேலும் ஒரு மருத்துவக்கல்லூரி மற்றும் நான்கு பொறியியல் கல்லூரிகளும் இங்கு உள்ளது.
இங்கு பல வரலாற்று தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளன. நடராஜர் கோவில், பாடலீசுவரர் கோவில், தேவநாத சுவாமி திருக்கோவில், விருதகிரிஸ்வரர் திருக்கோவில் மற்றும் பூவாரகா சுவாமி திருக்கோயிலும் இங்கு அமைந்துள்ளது.