green
merron
blue
brown
Blue

You are here

சென்னை
Particulars
விரிவாக்கம்
Area
4,4111 சதுர கி.மீ. sq.kms
மக்கள் தொகை
42, 16,268
மாவட்ட தலைமையகம்
சென்னை
மொழி
தமிழ்
முக்கிய இணையதளங்கள்
History And Geography

      இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் சென்னையும் ஒன்று. சென்னை தமிழகத்தின் தலைநகரம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உள்ளது. கலை மற்றும் அறிவியல் முன்னேற்றம் பெற்ற இடம். வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவாலும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களால் மற்ற பகுதிகளில் சூழப்பட்டுள்ளது. இங்கு அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், IIT, டைடல் பார்க், தலைமைச்செயலகம், அரசு அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம், ரிப்பன் மாளிகை, மெரினா கடற்கரை, கபாலீசுவரர் கோயில், சாந்தோம் தேவாலயம், ஆயிரம் விளக்கு மசூதி, அண்ணா நினைவகம், எம்.ஜி.ஆர். நினைவகம், வள்ளுவர் கோட்டம், விவேகானந்தர் இல்லம், ராஜ்பவன், மத்திய ரயில்நிலையம் ஆகியவை இங்கு அமைந்துள்ளது.

மக்கள்

     சென்னை பெருநகர வளர்ச்சி பலதரப்பட்ட மக்களையும் ஈர்க்கிறது. வேலைவாய்ப்பு, வணிகம், கல்வி ஆகியவை சிறந்த முறையில் மக்களுக்கு கிடைப்பதால் பல்வேறு சமூகம், மதத்தை சேர்ந்த மக்களால் இங்கு இணைந்து சிறந்த முறையில் வாழ முடிகிறது. தமிழக மக்களின் விருந்தோம்பல் உலக பிரசித்திப்பெற்றது. இங்குள்ள மக்களால் பழமையான சிறந்த நாகரிகங்களும், மரபுகளும் பின்பற்றப்படுகிறது. வீட்டு முற்றத்தில் அரிசி மாவு கோலம் இடுதல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. அது மட்டுமல்லாது வேற்று மாநிலத்தவர்களையும் இங்கு காணலாம். சீக்கியர்கள், குஜராத்தியர்கள், மலையாளிகள், முஸ்லிம்கள், கன்னடர்கள் ஆகியோர் இங்கு வேற்றுமை மறந்து ஒற்றுமையாக வாழ்வதை காண முடிகிறது.

கல்வி

      சென்னையில் பெரும்பாலும் உள்ள பள்ளிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக உள்ளன. இது தவிர CBSE, ICSE, NIOS மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும் உண்டு. இங்கு 1794ல் துவங்கப்பட்ட IIT (இந்திய பொறியியல் கல்லூரி), அண்ணா பல்கலைக்கழகமும், அதனுடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. இது மட்டுமல்லாமல் சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி, ராமசந்திரா மருத்துவக்கல்லூரி ஆகிய மருத்துவக்கல்லூரிகளும் இங்கு அமைந்துள்ளது.

போக்குவரத்து

       சென்னை தென்இந்தியாவின் ஒரு முக்கிய நுழைவாயிலாக விளங்குகிறது. சென்னையிலுள்ள சர்வதேச விமான நிலையம் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவையை வழங்குவதன் மூலம் நாட்டிலுள்ள மிக முக்கியமான விமான நிலையமாக சேவையில் சிறந்து விளங்குகிறது. சென்னையில் இரண்டு முக்கிய துறைமுகங்கள் உள்ளன. அவை, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் ஆகும். மேலும் ராயபுரம் துறைமுகம் மீன்பிடி தொழிலுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது. சென்னை மற்ற இந்திய நகரங்களுடன் சாலை போக்குவரத்து மற்றும் ரயில் வழி போக்குவரத்து மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை மத்திய ரயில் நிலையம் மூலம் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ரயில் சேவையை பெறமுடியும். மேலும் எக்மோர் ரயில் நிலையம் மூலமும் மாநில அளவிலான ரயில் சேவையை பெறலாம். சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக விளங்குகின்றது. மேலும் மெட்ரோ ரயில் சேவையின் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவையும் பெறலாம், மற்றும் 4,000க்கும் அதிகமான மாநகர பேருந்துகளையும் 643 வழித்தடங்களையும் உள்ளடக்கியது. மேலும் எளிமையான போக்குவரத்துக்காக பல்வேறு மேம்பாலங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அதில் அண்ணா மேம்பாலம், கத்திபாரா மேம்பாலம் போன்றவை சென்னையில் முக்கியமான மேம்பாலங்களில் ஒன்றாகும்.

Communication

      1785ம் ஆண்டு முதல் “மெட்ராஸ் கொரியர்” (Madras Courier) என்னும் வார இதழ் வெளியானது. அதனை தொடர்ந்து 1795ம் ஆண்டு “மெட்ராஸ் கெசட்” (Madras Gazzette) மற்றும் “கவர்ன்மென்ட் கெசட்” (The Government Gazzette) ஆகிய வார இதழ்களும் வெளியானது. 1836ம் ஆண்டு முதல் “தி ஸ்பெக்டேடர்” (The Spectator) என்னும் ஆங்கில நாளிதழ் வெளியானது. 1899ம் ஆண்டு வெளியான “சுதேச மித்திரன்” என்ற நாளிதழ் தமிழில் முதல் தமிழ் நாளிதழ் ஆகும். தற்போது, சென்னையில் “தி ஹிந்து” (The Hindu), “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” (The New Indian Express), “தி டெக்கான் குரோனிக்கல்” (The Deccan Chronicle) மற்றும் “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” (The Times of India) ஆகிய முக்கிய ஆங்கில நாளிதழ்களும், தமிழில் “தினமலர்”, “தினத்தந்தி”, “தினமணி”, “தினகரன்”, “தமிழ்முரசு”, “மக்கள் குரல்”, “மாலை மலர்” ஆகிய தமிழ் நாளிதழ்களும், ஏராளமான வார இதழ்களும் வெளியாகி வருகின்றன. அது தவிர தமிழ் மற்றும் ஆங்கில தொலைக்காட்சி சேவையும் உண்டு. 1930ம் ஆண்டு முதல் இங்கு வானொலி சேவையும் செயல்பட்டு வருகிறது.

சுற்றுலா

சென்னை அமைதியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. சென்னை கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் நினைவு சின்னங்களின் கலவையாக தோன்றுகிறது. சென்னை உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையை கொண்டது. இது வங்காள விரிகுடா கடலை ஒட்டி 13 கி.மீ. தூரத்திற்கு நீண்டுள்ளது. பிரகதீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோயில், வாலாஜா மசூதி, ஆயிரம் விளக்கு மசூதி, சாந்தோம் தேவாலயம் போன்றவை முக்கிய வழிபாட்டு தலங்களாகும்.