கரும்பு மற்றும் முந்திரி இங்கு முக்கிய பயிராக விளைவிக்கப்படுகிறது. சில பகுதிகளில் நெல்லும் விளைவிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை 226, 143. சென்னை, திருச்சி, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இங்கிருந்து ரயில் சேவையும் உண்டு.
கங்கைகொண்டசோழபுரம், ராஜராஜசோழனின் மைந்தன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. மேலும் ஸ்ரீ கலியுக வரதராஜபெருமாள் மற்றும் ஸ்ரீ கலியபெருமாள் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்திருவிழா இந்த பகுதியை சேர்ந்த மக்களால் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது.