மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி
மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)
Dr பீலா வெங்கடேசன், இ.ஆ.ப ( அரசு முதன்மை செயலாளர் )
தொலைபேசி 25671496,PABX-5975
மின்னஞ்சல் enersec@tn.gov.in
பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் மிக இன்றிமையாத ஒன்றாகும். மாநிலத்தின் தொழில், வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிகளுக்கு மின் வளர்ச்சி மிக அவசியமான ஒன்றாகும். இவ்வளர்ச்சிக்கு நம்பத்தகுந்த, தரமான, குறைவான விலையில் உள்ள மின்சாரம் மிகவும் தேவை. எனவே, மின் தேவைக்கும் மற்றும் மின் விநியோகத்திற்கும் இடையே உள்ள பற்றாக்குறையை ஈடுகட்டவும் பெருகி வரும் மின் தேவையை ஈடுகட்டவும் மின் விநியோகத்தை அதிகரிக்கவும் மின் உற்பத்தியைப் பெருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகின்றது. மேற்கூறிய காரணங்களால் மின் துறைக்கு தமிழக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றது.