மாண்புமிகு திரு. பி.மூர்த்தி
வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
மின்னஞ்சல் : minister_ctax[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25672232
பிரஜேந்திர நவ்னிட், இ.ஆ.ப., ( அரசு முதன்மை செயலாளர் )
தொலைபேசி 25672757 PBX No:5587
மின்னஞ்சல் ctsec@tn.gov.in
வணிகவரி துறை தமிழக அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் துறை. அரசின் வளர்ச்சி மற்றும் நல திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை, அரசு வரி விதிப்பு கொள்கை மூலம் வருவாயை பெருக்கி, உயர்த்தப்படும் வரியால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க வழிவகை செய்யும்.
பத்திரப் பதிவு துறை 138 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்வதுடன் அரசு நிர்வாகத்திற்கு தேவையான நிதியை திரட்டி தருவதில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. மேலும் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து ஒளிவு மறைவற்ற சேவையை துரிதமாக செய்ய உதவுகிறது. இந்த குறிக்கோளுடன் இத்துறை நவீன மயமாக்கலுக்கு அடிகோலிட்டுள்ளது
வணிகவரி துறை கீழ்காணும் குறிக்கோளுடன் இயங்குகிறது
சட்டம் மற்றும் வழிகாட்டுதலை மிக சரியான முறையில் நடைமுறைப்படுத்துவது
உச்சகட்ட வருவாயை பெருக்குவதுடன், அரசின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் நடைமுறைப்படுத்துவது
வணிகர்களுக்கு தரமான சேவை கிடைக்க செய்வதுடன் தொழில் மற்றும் வணிக மதிப்பீடு செய்தல்