green
merron
blue
brown
Blue

You are here

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
Contact details
Minister

மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள்

 

மின்னஞ்சல் :  minister_syw[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25671024

Secretary to Government

T. உதயச்சந்திரன், இ .ஆ .ப., ( அரசு முதன்மை செயலாளர் (மு.கூ.பொ) )

தொலைபேசி 25670997 PABX 5789

மின்னஞ்சல் spidept@tn.gov.in

Department Profile

அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் இதற்கெனத் தனியாக ஒரு துறை தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பல்முனை சிறப்புத் திட்டங்களை அறிவியல் தொழில் நுட்பம் மூலம் செயல்படுத்தி அனைத்துத் தரப்பினரும் சமூக-பொருளாதார வளர்ச்சியும் மேம்பாடும் பெற்ற ஒரு புதுயுகத்தை நோக்கி மாநிலத்தை அழைத்துச் செல்ல விழைந்துள்ளது.

வேளாண்மை, கல்வி, நீர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில்கள் மற்றும் கட்டமைப்புப் போன்ற முக்கிய துறைகளின் சீரான திட்டமிடப்பட்ட, நீடித்த வளர்ச்சியினை அடைய இத்துறை தொடர்புடைய துறைகளுடன் இணைந்து செயலாற்றும்.

இத்துறையானது, அனைத்துத் தரப்பு மக்களும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் பெற, குறிப்பாக ஏழைகள் மற்றும் மகளிர் பயனுறும் வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.

1.தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணித்தல்.

2.கள ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் குறித்த காலங்களில் மாவட்ட அளவில் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் கலந்தாய்வுகள் நடத்துதல்.

3.சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அலுவலர்களை, களப்பணி ஆய்வுகளை அடிக்கடி மேற்கொள்ளச் செய்து, திட்டங்களின் தரம் மற்றும் திறன் விவரங்களை ஆராய்ந்து அவை குறித்த கருத்துக்களை அரசிற்கு இத்துறை அளிக்கும். மேலும், திட்டங்களின் செயலாக்கத்தைச் செம்மைப்படுத்தி, மேம்படுத்தும் வழிமுறைகளை, தேவைப்படும்போது அரசிற்கு இத்துறை பரிந்துரைக்கும். இத்துறை, பிற துறைகளுடன் இணைந்து செயலாற்றுவதுடன், கள ஆய்வு விவரங்களின் அடிப்படையில், திட்டங்களில் எதிர்பார்க்கப்படும் பயன்களைப் பெற, ரிய கொள்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கான தக்க பரிந்துரைகளை வழங்கும்.

4.அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செவ்வனே செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அமைப்பாக இத்துறை செவ்வனே செயல்படும்.

திணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு

->Departments, HODs and Undertakings

ஆவணங்கள்: