green
merron
blue
brown
Blue

You are here

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
Contact details
Minister

மாண்புமிகு திரு.எஸ்.எம்.நாசர்

சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம்

 

மின்னஞ்சல்  : minister_mw[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :  044-25670401

Minister

மாண்புமிகு திரு. சிவ. வீ. மெய்யநாதன்

பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்

  

மின்னஞ்சல் : minister_bcmw[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :  044-25672172

Secretary to Government

விஜயராஜ் குமார் இ.ஆ.ப., ( அரசு முதன்மை செயலாளர் )

தொலைபேசி 25670848

மின்னஞ்சல் bcsec@tn.gov.in

Department Profile

சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட / சீரமரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த இவ்வரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.,

2. பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் கல்வி/ வேலை வாய்ப்பு மற்றும் தொழில் போன்ற நிலைகளில் தங்களது நிலையினை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கும் பொருட்டும் / சமுதாயத்திலுள்ள இதர பிரிவினருக்கு சமமான நிலையினை அனைத்துத் துறைகளிலும் அவர்கள் அடைவதை இலக்காகக் கொண்டும், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் இத்தகைய திட்டங்கள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநரகம் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் ஆகிய மூன்று இயக்குநரகங்களால் செயல்படுத்தப்படுகின்றன.கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த இவ்வரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

3. பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் சமூக கல்வி மற்றும் பொருளாதார நிலைகளைக் குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்துவதில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுக் கொள்கை, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வதற்கும், அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கும் ஏதுவாக சிறந்ததொரு பங்களிப்பை வழங்கியுள்ளது.

திணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு

->Departments, HODs and Undertakings

ஆவணங்கள்: