மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின்
பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன்.
மின்னஞ்சல் : cmo[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25672345
மாற்றுத் திறனாளிகளுக்கான நல்த்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த 1993ஆம் ஆண்டில் ஊனமுற்றோருக்கான தனி இயக்ககம் சமூக நல இயக்ககத்திலிருந்து பிரித்து ஏற்படுடுத்தப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான விரிவான மாநிலக் கொள்கையை இவ்வரசு வெளியிட்டது.
இத்துறை, மாற்று திறனாளிகள் (சமவாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம், 1995-ன் படி ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகமாக 1999 ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி நிலையிலுள்ள உயர் அலுவலர் ஊனமுற்றோருக்கான மாநில ஆணையாக நியமிக்கப்பட்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்குள்ள தனிப்பட்ட திறமைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களை உடல் ஊனமுற்றோர், குருடர், செவிடர் என்று அழைப்பதைத் தவிர்த்து அவர்கள் மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்றுவதற்கென இனி அவர்களை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என தனியாக ஒரு நிர்வாகத் துறை துவக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் சமுதாயத்தில் ஒரு அங்கமாக அனைவரும் ஏற்கவும், சமுதாய வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழுபங்கேற்பை உறுதி செய்வதற்கும் உரிய விழிப்புணர்வை இவ்வரசு ஏற்படுத்தி வருகிறது.
சமுதாயத்தில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் சமமாக ஈடுபடுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு முழுவதுமாக உதவும் வகையில் தமிழக அரசு அவர்களுக்கென பல கொள்கைகளை வகுத்தும், திட்டங்களைத் தீட்டியும், அமல்படுத்தி வருகிறது. ஏனைய மக்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகள் வாழவேண்டும் என்பதை உறுதி செய்யவென அரசால் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் பின்வருமாறு
1.அவயங்கள் மற்றும் அதன் செயல்பாட்டுக் குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுத்தல்
2.ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தல்
3.மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல்
4.சிறப்புக் கல்வி அளித்தல்
5.மறுவாழ்வுப் பணிகளுக்கென நிபுணர்களை ஆயத்தம் செய்தல் / தயார்படுத்தல்
6.உதவி உபகரணங்களை வழங்குதல்
7.கல்வி மற்றும் சுயவேலை வாய்ப்பு உள்ளிட்ட பொருளாதார மேம்பாடு அடையச் செய்தல்
8.தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்துதல்
9.சமூகப் பாதுகாப்பு