green
merron
blue
brown
Blue

You are here

Secretary to Government
Department Profile

பொதுப்பணித் துறையானது நீர்வள ஆதாரத்துறை மற்றும் கட்டட அமைப்பு (பொதுப்பணித்துறை) என இரு அமைப்புகளாகச் செயலாற்றி வருகிறது.

கட்டட அமைப்பு

பொதுப்பணித்துறை அரசின் முதுமையான சேவைத் துறைகளில் ஒன்றானதாகும். இத்துறை கடந்த 153 ஆண்டுகளாக அரசு கட்டடங்கள், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. நமது நினைவுச் சின்னங்களும், சேவைக் கட்டடங்களும் இத்துறையின் தொழில்நுட்ப திறமைக்கு சான்றாக விளங்குகின்றன. தற்போதைய சூழ்நிலைக்கேற்ப மின் ஆளுகையின் மூலம் இவ்வமைப்பு சிறந்த சேவையை பொது மக்களுக்கு அளிக்கும் நோக்கோடு செயல்படுகிறது. இந்த தொலைநோக்கு பார்வையுடன் சிறந்த சேவை அளிப்பதற்கு இத்துறை எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இந்திய தர நிறுவன விதிகளில் நிர்ணயித்துள்ள விவரக் குறிப்பின் அடிப்படையில் தற்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டட அமைப்பு பொதுக் கட்டடங்களின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது. பொதுப்பணித்துறை, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள புராதானக் கட்டடிங்களை (Heritage Buildings) அதன் தொன்மையான கட்டடக்கலை, கலைநயம், வரலாற்று சிறப்புகள், தனித்துவமான அடையாளங்கள் மற்றும் தொல்லியல் மரபுகள் மாறா வண்ணம் சீரமைத்து, பாதுகாத்து, பராமரித்து வருகிறது.

மக்களுக்கு பாதுகாப்பான, பொருத்தமான பொதுக் கட்டடங்களை நியாயமான செலவில், நன்கு உருவான நடைமுறைகள் மற்றும் தற்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டித்தரும் தரமான நற்பணியை தொலைநோக்கு பார்வையுடன் இத்துறை செயலாற்றி வருகிறது.

பொதுப்பணித்துறையின் கட்டட அமைப்பு, பள்ளிக் கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலம், உள்துறை (நீதிமன்றங்கள், போக்குவரத்து, சிறைச்சாலைகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட), வருவாய், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், சுற்றுலா மற்றும் பண்பாடு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சமூக நலம் போன்ற பல்வேறு அரசுத்துறைகளின் கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நவீன தொழில்நுட்பம் மற்றும் கடந்த பல ஆண்டுகளில் பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டு பாதுகாப்பான அரசுக் கட்டடங்களை நியாயமான செலவில் கட்டுவதற்கு தரமான சேவையை பொதுப்பணித்துறை அளித்து வருகிறது. பொதுப்பணித் துறையின் கட்டட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப வரையறைகள் யாவும் இந்தியத் தர நிர்ணய விதிகளை பின்பற்றியே அமைகின்றன.

முக்கிய செயல்பாடுகள் பொதுப்பணித்துறை, பின்வரும் முக்கிய செயல்பாடுகள் மற்றும் தொடர்புடைய செயல்களை நிறைவேற்றி வருகிறது.

a) மாநில அரசின் முதலீட்டு உடைமைகளாக விளங்கும் அரசுக் கட்டடங்களை திட்டமிடுதல், வடிவமைத்தல், கட்டுதல் மற்றும் பராமரித்தல்

b)அரசின் சார்பில் நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களை கட்டுதல் மற்றும் பராமரித்தல்.

c) நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகளை வைப்புத் தொகை பணிகளாக மேற்கொள்ளுதல்.

d) ஆழிப் பேரலை மறுசீரமைப்பு பணிகள் போன்ற பேரிடர் மறுகட்டுமானப் பணிகளை செயல்படுத்துதல்.

e) பாரம்பரிய கட்டடங்களை புதுப்பித்து புனரமைத்தல்.

f) மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் கட்டடப் பணிகளை வைப்புத் தொகை பணிகளாக மேற்கொள்ளுதல்.

g)கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டடப்பணி நடைமுறைகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல்.

h)ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை மற்றும் நீதித்துறை போன்ற துறைகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் சொத்து மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல்.

i) பொதுக் கட்டடங்களுக்கு உறுதிச் சான்றிதழ்கள், அரசு அலுவலகங்களுக்காக வாடகைக்கு எடுக்கப்படும் தனியார் கட்டடங்களுக்கு வாடகை நிர்ணயச் சான்றிதழ்கள் வழங்குதல்.

நீர்வள ஆதாரத்துறை

பொதுப்பணித்துறை அரசின் முதுமையான சேவைத் துறைகளில் ஒன்றானதாகும். இத்துறை கடந்த 153 ஆண்டுகளாக பாசன அமைப்புகளுக்கான கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நமது தொழில்நுட்ப திறமைக்கு பல அணைக்கட்டுகள் சான்றாக விளங்குகின்றன. தற்போதைய சூழ்நிலைக்கேற்ப மின் ஆளுகையின் மூலம் இவ்வமைப்பு சிறந்த சேவையை பொது மக்களுக்கு அளிக்கும் நோக்கோடு செயல்படுகிறது. செயற்கை முறையில் நீர் செறிவூட்டுதல், சிறந்த நீர் மேலாண்மை, நீர் நிலைகளை பாதுகாத்தல் மற்றும் பாசன திட்டங்களில் நீர் பயனீட்டாளர்களின் பங்கு போன்றவற்றின் முக்கியத்துவம் அறியப்படுகிறது. மேலும், அதிகபட்ச பாசனத் திறனை எட்ட இத்துறை கடினமாக உழைத்து வருகிறது. வெள்ள நீரை திருப்பிவிட்டு, நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தி, பாசனம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காக போதுமான அளவு நீரை அளிக்க மாநிலத்திலுள்ள நதிகளை இணைப்பது அவசியமாகிறது. இந்த சிறந்த சேவை அளிப்பதற்கு இத்துறை தொலைநோக்கு பார்வையுடன் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

கிடைப்பதற்கரிய நீர்வள ஆதாரத்தை மேம்படுத்துவதும், நிலை நிறுத்துவதும் நீர்வள ஆதாரத் துறையின் முக்கிய நோக்கமாகும். திட்டமிடுதல், பாசனத்திற்கான மாநிலத்தின் நீர் ஆதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தல், பராமரித்தல், தேக்கி வைத்து நெறிப்படுத்துதல், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் மாற்று வழி அமைத்தல், வடிகால், கடலோரப் பாதுகாப்பு, நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீரை நெறிப்படுத்துதல், உள்நாட்டு நதிகளை இணைத்தல் ஆகியன நீர்வள ஆதாரத்துறையின் பொறுப்புகளாகும். முதல் நூற்றாண்டிலேயே பாசன கட்டமைப்புகளை உருவாக்கி பராமரித்ததற்கான நீண்ட வரலாறு தமிழ்நாட்டில் உள்ளது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட மிகவும் புகழ்பெற்ற பாசன கட்டமைப்பான கல்லணை இன்றும் பயன்பாட்டில் உள்ளது ஓர் உதாரணமாகும். இதுவரை உருவாக்கப்பட்டுள்ள பாசன அமைப்புகளில் பல்வேறு பிரிவுகளின் ஒருங்கிணைப்பு நாட்டின் விவசாய முன்னேற்றத்திற்கு உதவியுள்ளது.

திணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு

->Departments, HODs and Undertakings

ஆவணங்கள்: