green
merron
blue
brown
Blue

You are here

திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை
Contact details
Minister

மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின்

பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள் மற்றும்  மாற்றுத் திறனாளிகள் நலன்.

 

மின்னஞ்சல் :  cmo[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :  044-25672345

Deputy Chief Minister

மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள்,  திட்டம் மற்றும் வளர்ச்சி

 

மின்னஞ்சல் :  minister_syw[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25671024

Secretary to Government

ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., ( அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) )

தொலைபேசி 25674310, 5078

மின்னஞ்சல் plansec@tn.gov.in

Department Profile

மாநிலத்திற்கான ஆண்டுத் திட்டங்கள் மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தயாரித்தல், மாநிலத் திட்டச் செலவினங்கள், இருபது அம்சத் திட்டம் மற்றும் மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள் ஆகியவற்றை கண்காணித்து ஆய்வு செய்தல் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மை பொறுப்புகளாக இருந்தன. தற்பொழுது, வரவு செலவுத் திட்டத்தில், திட்டம் மற்றும் திட்டம் சாராத பகுதிகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, மத்திய திட்டக் குழுவிற்கு பதிலாக, நித்தி ஆயோக் (NITI Aayog) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள், முதன்மையான நோக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. நித்தி ஆயோக்கைத் தொடர்ந்து, இத்துறை நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள், குறிக்கோள்கள் மற்றும் குறியீடுகளை அடைவதற்கு மிகுந்த கவனம் செலுத்துகிறது. மேலும், வளர்ச்சி சாh¦ந்த திட்டங்களுக்கான நீண்டகால செயல் உத்திகள் அடிப்படையில் இலக்கு நிர்ணயித்தல், இடைப்பட்ட காலங்களில் செயல்படுத்த தேவையான வளர்ச்சி சார்ந்த திட்டங்களை முன்னிலைப்படுத்தல் மற்றும் அம்முயற்சிகளில் கொள்கை ஒருங்கிணைப்பினை உறுதிப்படுத்துதல் ஆகிய மாற்றங்களை உருவாக்குவதே இத்துறையின் முதன்மைப் பணியாகும்.

முழுமையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக, பல்வேறு அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து, மாநில அளவிலான பல்வேறு துறைகள் சார்ந்த குழுவின் உறுப்பினராக இருந்து, வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோப்புகளை இத்துறை கூர்ந்தாய்வு செய்கின்றது.

இத்துறை நித்தி ஆயோக்(NITI Aayog)உடன் கலந்துரையாடும் மாநில அரசின் முகமைத் துறையாகும். மேலும், அரசு மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்குத் தேவையான ஒருங்கிணைப்பு பணிகளையும், துறைகளிடமிருந்து பெறப்படும் பொருண்மைகள் குறித்த நடப்பு நிலையைப் பிரகதியின் கீழ் (PRAGATI) பதிவேற்றம் செய்கிறது.

இத்துறை, அரசின் புதிய முயற்சிகளின் செயலாக்கத்திற்காக தொடார்புடைய பல்வேறு துறைகளின் செயல்களை ஒருங்கிணைக்கிறது.

மாநிலத் திட்டக் குழு, பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை மற்றும் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை வல்லுநர்களின் சிறப்புத் திறமைகளை பயன்படுத்தியும் கொள்கைகளுக்கான ஆலோசனைகளை வழங்குகிறது. மேலும், தமிழ்நாடு புத்தாக்க முயற்சி வழியாக ஆதாரங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கொள்கைகளுக்கு திட்டச் செயலாக்கம் அளிக்கிறது.

மேலும், சிறப்பு முயற்சிகள் திட்டத்தின்கீழ் மேற்பார்வையிடப்பட்டு வரும் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் மற்றும் சில புதிய சிறப்பு முயற்சிகளாக (New Special Initiatives) முக்கியமான உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்த திட்டங்களின் முன்னேற்றத்தை வேகப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

1.0 முக்கிய நடவடிக்கைகள்

i.நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை 2030-ல் அடைய மாநில அரசின் முயற்சிகளுக்கு அனைத்துதுறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்;

ii.நித்தி ஆயோக் (NITI Aayog) அமைப்புடன் இணைந்து நீண்ட கால செயல் உத்திகளை செயல்படுத்துதல் மற்றும் இடைப்பட்ட கால செயல்பாட்டுத் திட்டமிடுதலை நடைமுறைப்படுத்துதல்;

iii.முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தினை (Aspirational Districts Programme) மாநில அளவில் ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல்;

iv.வளர்ச்சிக் குறியீட்டை அளவிடுதல் மற்றும் பெரிய திட்டங்களை மதிப்பீடு செய்தல்;

v.மாநிலத் திட்டக் குழுவினரால் நிலம் மற்றும் நீர் பயன்பாடு குறித்து குறிப்பான திட்டங்களின் தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளுவதைக் கண்காணித்தல்;

vi.இருபது அம்சத் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளால் செயல்படுத்தப்படும் கண்காணிக்கப்பட வேண்டிய பல்வேறு இனங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து தகவல்கள் சேகரித்தல் மற்றும் தொகுத்தல்;

vii.தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகளை நிர்வகித்தல்;

viii.பொருளாதார மற்றும் சமூகக் காரணிகளின் அடிப்படையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் சீரான வளார்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை மேற்பார்வையிடல்;

ix.மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மாற்றாக, 2015-2016 ஆம் ஆண்டு முதல் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல்;

x. பெரிய உள் கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலாளர் அவர்களால் சீராய்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்;

xi.பல்வேறு அரசுத் துறைகளை உள்ளடக்கிய சிறப்பு மற்றும் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஒருங்கிணைந்து செயல்படுதல்;

xii.மாவட்ட திட்டக் குழுவின் ஒரு அங்கமாக செயல்படும் மாவட்ட திட்டப் பிரிவின் மூலமாக மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களை மேற்பார்வையிடுதல்;

xiii.அரசுத் துறைகளில் ஆதாரங்கள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தை மேம்படுத்துதல்.

xiv.மாநில வருவாய் மதிப்பீடுகள், பொருளாதாரக் கணக்கெடுப்பு, வேளாண் கணக்கெடுப்பு, சமூகப் பொருளாதார ஆய்வுகள், சிறப்பு ஆய்வுகள், வயது முதிர்ந்தோரின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு, மாநில பொருளாதாரத்தின் மாதாந்திர அறிக்கைகள் ஆகியவை குறித்து, பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை மூலம் பொது மற்றும் தனியார் துறைகளிடமிருந்து புள்ளி விவரங்களை சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பரவச் செய்தல்;

xv.வளர்ச்சித் திட்டங்கள், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள், வெளிநாட்டு நிதி உதவி பெறும் திட்டங்கள் ஆகியவற்றை மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை மூலமாக மதிப்பீடு செய்தல்;

xvi.மாநிலத் திட்டக் குழு, பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை மற்றும் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை ஆகிய துறைகள் செயல்படுவதற்கான நிர்வாக வசதிகள் செய்தல்;

xvii.சிறப்பு முயற்சிகள் திட்டத்தின் கீழ் ‘மெட்ரோ இரயில் திட்டம்’ போன்ற புதிய மற்றும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் ; மற்றும்

xviii.புதிய சிறப்பு முயற்சிகளாக முக்கியமான உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்த திட்டங்களின் முன்னேற்றத்தை வேகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளுதல்.

திணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு

->Departments, HODs and Undertakings

ஆவணங்கள்: