மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
வேளாண்மை, வேளாண்மைபொறியியல், வேளாண்பணிக்கூட்டுறவுசங்கங்கள்,
தோட்டக்கலை, சர்க்கரை, கரும்புத்தீர்வை, கரும்புப்பயிர்
மேம்பாடு மற்றும் தரிசுநில மேம்பாடு.
மின்னஞ்சல் : minister_agri[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25670682
அபூர்வா, இ.ஆ.ப., ( வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் )
தொலைபேசி 25674482
மின்னஞ்சல் agrisec@tn.gov.in
வேளாண்மை தேசிய பொருளாதாரத்தின் உயிர்நாடி ஆகும். உணவுப் பாதுகாப்பில் நிலையான தன்மையை அடையவும், நாட்டு மக்களின் நலன் காக்கவும், வேளாண் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். அனைவருக்கும் போதுமான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் தலையாய கடமையாகும். வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளித்து உணவுதானியப் பயிர்கள் உட்பட நெசவாலைகள், சர்க்கரை ஆலைகள், சமையலுக்குப் பயன்படும் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகள் போன்ற வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படும் மற்ற பயிர்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டதன் விளைவாக கடந்த ஆண்டுகளில் வெள்ளம், வறட்சி ஏற்பட்டபோதும், உணவு நெருக்கடி ஏற்படாமல் சமாளிக்கப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தேசிய அளவிலும் மாநில அளவிலும் வேளாண்மையின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 1960-1961ஆம் ஆண்டில் சுமார் 42.46 சதவீதமாக இருந்த வேளாண்மையின் பங்கு 2009-2010ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தமிழகத்தில் ஏறத்தாழ 40 சதவீத மக்களுக்கு குறிப்பாக பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தமிழகத்தில் ஏறத்தாழ 40 சதவீத மக்களுக்கு குறிப்பாக, பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே வாடிநவாதாரமாக உள்ளது. மண்வள சீர்கேடு, குறைந்து வரும் நீர்வள ஆதாரங்கள், கிராமப்புறங்களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்குப் போதிய முதலீடு அளிக்காதது, போதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளாத நிலை மற்றும் இடுபொருட்களின் விலை ஏற்றம் ஆகிய காரணங்களால் வேளாண் தொழிலில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் களைந்து, வேளாண்மையில் அதிக உற்பத்தியை அடைய, விவசாயிகளுக்குத் தேவையான பயிர்வாரியான/ பகுதிவாரியான உத்திகளை வகுத்து, கிராமப்புறங்களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் இவ்வரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.