மாண்புமிகு திரு.எஸ். ரகுபதி
சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்டம்.
மின்னஞ்சல் : minister_law[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25671118
S. ஜார்ஜ் அலெக்சாண்டர் ( அரசு செயலாளர் )
தொலைபேசி 25672920: Intercom No. 5657
மின்னஞ்சல் lawsec@tn.gov.in, lawsec.legis@tn.gov.in
சட்டமானது, சமுதாய ஒழுங்கினைப் பேணி வருவதற்கும், நபர்களுக்கும், சொத்துக்களுக்கும், பாதுகாப்பு வழங்குவதற்காகவும், சமுதாயமானது தானே அமைத்துக்கொண்ட விதிகளின் அமைப்பாக இருக்கின்றது. சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளுக்கு இணங்கிய வகையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டம் குறித்து நேர்மறையாளர்களின் கருத்தானது இரண்டு பரந்த கோட்பாடுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. அவையாவன,
(1) நீதி, ஒழுக்கநெறி மற்றும் பிற நெறிமுறை எதனையும் நடைமுறைபடுத்துமாறு சட்டங்கள் கோரலாம், மற்றும்
(2) சட்டமானது ஒழுங்கை நிலை நிறுத்தவும் சமுதாயத்தை ஆளுகை செய்வற்கும் வகை செய்வதற்கான விதிகளின் தொகுப்பேயன்றி வேறல்ல.
ஆஸ்டின் கூற்றுக்கு இணங்கிய வகையில் சட்டம் என்பது, பொதுமக்கள் கீழ்ப்படிகிற வழக்கத்தைக் கொண்டுள்ள இறையாண்மை சக்கி ஒன்றில் இருந்து வரும் ஆணைகளின் அச்சுறுத்தல்களைக் கொண்ட கட்டளைகள் ஆகும். சட்டப்படியான விதிகளாகக் கருதப்பட்டிருக்கிற அறநெறி அடிப்படையில் நல்ல முறையில் அமைக்கப்பட்ட பொருண்மைகள் மற்றும் வழக்கங்கள் பொதுமக்களின் நல்ல குணங்களின் வளர்ச்சியை மேம்படுத்துகின்றன. சட்டமானது சமுதாய நிறுவனமாக இருக்கிற நிலையில் அது சமுதாயத்தின் மீது நேரடியான தாக்கத்தைக் கொண்டுள்ள பிற பல்வேறு பிரிவுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. மனிதனின் அனுபவம் தான் சட்டத்தின் அடிப்படையாகும், சட்டமானது சக்தி வாய்ந்த சமுதாயத் தேவைகளை எதிர்கொள்வதற்கு வடிவமைக்கப்பட்டதாக இருக்கிறது. சமுதாயப் பிரச்சனைகளையோ பிற பிரச்சனைகளையோ புலனாய்வு செய்தல், பகுத்து ஆய்தல், தீர்த்து வைத்தல் ஆகிய செயல் முறைகளைப் பயன்படுத்துகிற பயனுறு அறிவியலாக சட்டத்தைக் கருதுகிற நடைமுறை அணுகுமுறையை அது ஏற்று கொள்கிறது, அல்லது அது முதல் நிலையில் சாத்தியமான அணுகுமுறை ஒன்றை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீதிமுறை தீர்ப்புகளின் வாசகங்களின்படி சட்டத்தைப் பொருள் வரையறை செய்கிறது.
சட்டத்தின் குறிக்கோள்கள்
(1) சிறிய முறையிலான எதிர்ப்புத்தன்மை அல்லது முரண்பாடு ஆகியன ஏற்படுவதற்கிடையே எத்தனை விருப்பங்களை மனநிறைவு செய்யக்கூடுமோ அத்தனை விருப்பங்களை மனநிறைவு செய்தல்,
(2) சமுதாயத்தின் நோக்கங்களுடன், தனி நபரின் நோக்கங்கள், விருப்பங்கள் தேவைகள் ஆகியவற்றைச் சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்தல்,மற்றும்
(3) தனி நபருக்கும் சமுதாயத்திற்கும் இடையேயான உறவில் நல்லிணக்கத்தை கொண்டு வருதல்.