மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின்
பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன்.
மின்னஞ்சல் : cmo[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25672345
மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி
மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)
மாண்புமிகு திரு. எஸ்.எஸ். சிவசங்கர்
போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட
போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்
மின்னஞ்சல் : minister_transport[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25678843
தீரஜ் குமார் இ.ஆ.ப ( அரசு கூடுதல் தலைமை செயலாளர் )
தொலைபேசி 25671113,25670077 PABX 5632
மின்னஞ்சல் homesec@tn.gov.in
மாநிலத்தின் காவல் துறை நிர்வாகம், அத்துறையின் சார்நிலைப்பணிகள், சிறைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றை உள் துறை பொறுப்பேற்று நிர்வகித்து வருகின்றது. இத்துறைகள் தொடர்பான கொள்கைகள் வகுத்தல், சட்டங்கள் இயற்றுதல், குற்றவியல் நீதித் துறையினை திறம்பட நிர்வகிப்பதற்கான விதிமுறைகளை வகுத்தல், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கினைப் பராமரித்து அவற்றினை செவ்வனே நடைமுறைப் படுத்துதல் ஆகியவை உள்துறையின் அடிப்படை நோக்கங்களாகும் .
மாநில நிர்வாக அமைப்பிலுள்ள மிகப் பழைமையான பல துறைகளுள் உள் துறையும் ஒன்றாகும். மாநில அலுவல் விதிகளின்படி (BUSINESS RULE-ன்கீழ்) ஒதுக்கீடு செய்யப்பட பொருண்மையின்படி, உள் துறைக்கென ஒதுக்கப்பட்ட இனங்களின் விவரம் பின் வருமாறு
உள் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் பின்வரும் துறைகள்/அலகுகள் இயங்கி வருகின்றன
1. காவல்
2. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்
3. தடய அறிவியல்
4. சிறைச்சாலைகள்
5. போக்குவரத்து
6. நீதிமன்றங்கள்
7. சினிமா
8. குடியுரிமை
9. குற்ற வழக்கு தொடர்தல் (PROSECUTION)
மேற்கண்ட துறைகளின் நடவடிக்கைகள் பற்றிய குறிப்பு பின்வருமாறு
1. காவல் துறை
காவல் துறை தொடர்பான நிர்வாகம் மற்றும் பணியமைப்பு - காவலர் படைக்கு ஆள் சேர்ப்பு மற்றும் அவர்களது பணிகுறித்த நிர்வாகம் - ஆயுதச் சட்டத்தின் கீழ் துப்பாக்கி உரிமம் வழங்குதல் - காவல் நிலையங்கள் தொடங்குதல் - உள்துறை தொடர்பான ஏனைய பணிகள் - ரயில்வே பாதுகாப்பு - மத்திய அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேரும் விண்ணப்பதாரர்களின் நடத்தை மற்றும் அவர்களின் முந்தைய நிலைகளைப் பற்றிய விவரங்களை சரிபார்த்தல் - தொல்லைகள் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தல். ( Control of Nuisance under Nuisance Act.)
2. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்
தீயணைப்பு படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாகம் - புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையயங்கள் தொடங்குதல்
3. தடய அறிவியல்
தடயவியல் அறிவியல் துறை தொடர்பான நிர்வாகம் மற்றும் பணியமைப்பு குறித்த விவகாரங்கள்.
4. சிறைத் துறை
சிறைத் துறை நிர்வாகம் - நன்னன்பிக்கை உறுதிமொழியின் கீழ் (PAROLE ) கைதிகளை விடுவித்தல் - குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக அளிக்கப்படும் விடுதலை - கைதிகளது தண்டனைக் குறைப்பு அல்லது மன்னிப்பு - சிறைச் சாலைகள் தொடங்குதல்.
5. போக்குவரத்து
சிறு பேருந்துகளை (மினி பஸ்) திட்டம் தொடர்பான அனைத்து விவகாரங்கள் - வரியமைப்பு - மாநிலங்களுக்கு இடையேயான வழித் தடங்கள் குறித்த திட்டங்கள் - மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் நிதியுதவி வழங்குதல் - போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சட்டம் - சாலைப் பாதுகாப்பு நெறிமுறைகள் - வாகனங்களுக்கு சிறப்புப் பதிவு எண்கள் (FANCY NUMBERS) வழங்குதல் - சிறு பேருந்துகள் (மினி பஸ் ) தொடர்பான விவகாரங்கள் - ஒப்பந்த ஊர்திகள் - நிலை ஊர்திகள் (STAGE CARRIAGES) - சரக்கு ஊர்திகள் - புதிய சோதனைச் சாவடிகள் தொடங்குதல் - போக்குவரத்து துறை குறித்த நிர்வாகப் பணிகள் .
6. நீதித் துறை நிர்வாகம்
கட்டிடங்கள் - நீதித் துறை செவ்வனே இயங்குவதற்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் இத்துறையின் சீரான செயல்பாடுகளுக்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் அளித்தல் - உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் அமைத்தல் - பரிசுச் சீட்டுகள் தொடர்பான விவகாரங்கள் - குடும்ப நீதிமன்றங்கள் அமைத்தல் - சட்ட உதவிகள் வழங்குதல் - திருமண சட்டங்கள் மற்றும் வரதட்சணைத் தடுப்புச் சட்டம் தொடர்பான விவகாரங்கள் - மதுவிலக்குச் சட்டம் - குற்ற வழக்குத் தொடர்வினை சரியான முறையில் நடத்துதல் மற்றும் அதன் மீதான கண்காணிப்பு தொடர்பான விஷயங்கள்.- சட்ட அலுவலர்கள் மற்றும் நீதி நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோரின் செயல்பாட்டினைக் கண்காணித்தல்.
7. சினிமா
திரையரங்குகளின் அடிப்படை வசதிகள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள் - திருட்டு வீடியோவைக் கட்டுப்படுத்துதல் - வீடியோ கேசட் பதிவுக் கருவிகள் மூலம் தொலைக் காட்சியில் திரைப் படங்கள் ஒளி பரப்புவதை ஒழுங்குபடுத்துதல் - மாநிலத்தில் இயங்கும் கேபிள் டிவி இணைப்புகளின் செயல்பாட்டினை ஒழுங்குபடுத்துதல்.
8. குடியுரிமை
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பக்டூன் நாட்டு மக்கள் இங்கு தங்குவதற்கும் காலக்கெடுவை நீட்டிப்பதற்கும் அனுமதி வழங்குதல் - வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிற காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் இந்தியக் குடியுரிமை உள்ளோருக்கு காவல் துறை மூலம் தடையின்மை சான்றளித்தல் - வெளிநாடுகளில் பணி செய்வோருக்கு சட்ட பூர்வமாகச் சேர வேண்டிய தொகை மற்றும் அவர்கள் அங்கு இறக்க நேரிட்டால் இழப்பீட்டுத் தொகை ஆகியன பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளல் - அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தங்கியுள்ளவர்கள் இந்தியவிற்கு திரும்பி வர (Certificate for No Obligation) பொறுப்புகள் ஏதுமில்லை என்ற சான்று வழங்குதல்.
9. குற்ற வழக்குத் தொடர்வு
குற்ற வழக்குத் தொடர்வு இயக்ககம் இம்மாநிலத்தில் குற்ற வழக்கு நடத்துனர்களின் பணிகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் குற்ற வழக்குத் தொடர்வு இயக்ககமானது 1995ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலகு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களின் பட்டியல்-7வது இணைப்புப் பட்டியலில்-பதிவு 8 மற்றும் பதிவு 51-ன்கீழ், மதுபானங்களை உற்பத்தி செய்தல், உடைமையில் வைத்திருத்தல், கொண்டு செல்லுதல், கொள்முதல் மற்றும் விற்பனை முதலியன பற்றிய சட்டம் இயற்றும் அதிகாரமும் மதுபானங்களின் மீது ஆயத்தீர்வை விதிக்கும் அதிகாரமும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கை 21 ஆண்டுகளாக மாறுபாடின்றி தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் நிர்வாக அமைப்பு மற்றும் செயல்பாடுகள்
தமிழ்நாடு அரசின் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் பின்வரும் நான்கு அமைப்புகள் செயல்படுகின்றன
1. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகம்
2. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு
3. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்)
4. போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு.
(1) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகம்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகம், 1937 ஆம் ஆண்டின் தமிழ்நாடு மது விலக்குச் சட்டம் மற்றும் அச்சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள முக்கிய விதிகள் ஆகியவற்றை அமல்படுத்துகிறது
(2) மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கொண்டு செல்லுதல், வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தலை ஒழிப்பதற்காகவும், போலி மற்றும் ஆயத்தீர்வை செலுத்தப்படாத இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுவதை தடுப்பதற்காகவும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
(3) தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்), 23.5.1983 அன்று கம்பெனிகள் சட்டம் 1956-ன் கீழ் தமிழ்நாடு முழுவதும் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகள், பீர் மற்றும் சாராயத்தை மொத்த விநியோகம் செய்ய தனியாரிடமிருந்து கையகப்படுத்தும் நோக்குடன் அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மது, பீர் மற்றும் ஒயின் ஆகியவற்றின் மொத்த விற்பனை விநியோகத்தை அன்றைய தினத்திலிருந்தே செய்து வருகிறது.
(4) போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு
போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவானது (குற்றப் புலனாய்வு துறை) சென்னையில் 17.12.1963 அன்று ஏற்படுத்தப்பட்டது. தற்போது மொத்தம் 15 போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அலகுகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்களைத் தயாரித்தல், பயன்படுத்துதல், கடத்துதல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய நுண்ணறிவு தகவல்களைச் சேகரித்தல் மற்றும் இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது ஆகியவை இப்பிரிவின் முக்கிய பணிகள் ஆகும்.