மாண்புமிகு திரு. க. பொன்முடி
தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்
மின்னஞ்சல் : minister_hredu[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25671142
D. கார்த்திகேயன், இ.ஆ.ப., ( அரசு முதன்மை செயலாளர் )
தொலைபேசி 25670499
மின்னஞ்சல் hrsec@tn.gov.in
கல்வி நிலையில் குறிப்பாக உயர்கல்வி, மக்களின் வாழ்வியல் திறன்களை வலுப்படுத்தும் வளமுடையது. அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு உயர்கல்வி உறுதுணையாக இருப்பதோடு அன்றி, வாழ்க்கையில் உயர்நிலையை எட்டுவதற்குரிய அடித்தளமாகவும் அமைகிறது. உயர்கல்வி, மனிதவள மேம்பாட்டுக்கான நவீன இலட்சியக் குறியீடுகளை நோக்கமாகக் கொண்டு, நாட்டை மேம்படுத்துவதற்கான அடிப்படை அணுகுமுறையைக் கொண்டுள்ளது. மேலும் இது, கி.பி. இரண்டாம் ஆயிரமாண்டைய முன்னேற்றத்தை நோக்கிய கோட்பாடுகளின் ஆதார அமைப்பாகும்.
நிறுவனங்களில் புதுமைகளையும், நேர்த்தியையும், மேலோங்க காண்பதே உயர்கல்வித்துறையின் தொலை நோக்கமாகும். கல்வித்தரத்தை மேம்படுத்துவதே முக்கியமான நோக்கமாக அமைகிறது. உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நிலையில், கிராமப்புற மாணவர்களுக்கும், பின்தங்கிய மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உயர்கல்வியின் வாயில்களையும் வாய்ப்புகளையும் திறந்து வைப்பதும் உயர்கல்வித்துறையின் உள்ளார்ந்த விருப்பமாகும். நமது இளைஞர்கள் தங்களுடைய தனித் திறமைகளையும், செயல் திறன்களையும், கண்டறிந்து வளர்த்துக் கொள்ளவும், அவற்றை மேம்படுத்திக் கொள்ளவும், அவர்கள் இந்த நூற்றாண்டின் அறைகூவல்களை ஏற்பதற்காக தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளவும் செய்வதே உயர்கல்வித்துறையின் இலக்காகும். ஆகவே, அனைவரும் உயர்கல்விபெற்று ஒளிரவேண்டும் என்பதை இத்துறை பெரிதும் வலியுறுத்துகிறது. உயர்கல்வித்துறையின் உயரிய நோக்கம் தன்னார்வ ஊக்குவிப்புடன் செயற்படும் நிறுவனங்கள் வாயிலாக மனிதவள மேம்பாட்டினை வளர்ப்பதும், பண்பாடும் சால்பும் கொண்டு வல்லுநர்களை உருவாக்கி, மாநிலத்தையும் நாட்டையும் செழுமைப்படுத்துவதும், உலகளாவிய நிலையில் ஒப்பற்ற மாணவர்களை ஈர்க்கும் பல்கலைக்கழகக் கல்வியினை வழங்கும் உன்னதமான இடமாக தமிழ்நாட்டை உருவாக்குவதும் உயர்கல்வித் துறையின் திட்டமாகும்.
உயரிய நோக்கத்தை எய்தும் உன்னத் திட்டங்கள் வருமாறு.
1. கலை, அறிவியல் கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வியை வழங்குவதும், அவற்றின் தரத்தையும் மேம்படுத்துதல்.
2. கல்லூரிகளின் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்.
3. உலகத்தரம் வாய்ந்த கற்பித்தல் நெறி முறைகளில் கல்வி வழங்குதல்.
4. இணையவழி மின்னாளுமையை (E. governance) நடைமுறைப்படுத்தல்.
5. கல்விக்கூடங்களையும், தொழில் நிறுவனங்களையும் இணைப்பதன் மூலம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தலும் தொழில் முனைவோர் நெறிப்பாட்டை வளர்த்தல்.
6. மாநிலத்தில் அனைவரும் சமூகப்பொருளாதார முன்னேற்றம் காணும் வகையில் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பளித்தல்.
7. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மக்களிடையே பரவச் செய்தல்.
7.உலகளாவிய நிலையில் உள்ள வேலை வாய்ப்புகளை பெறும் வகையில், உலகத் தரம் வாய்ந்த கல்வியியல் பட்டதாரிகளை உருவாக்குதல்.