மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன்
மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு
மின்னஞ்சல் : minister_health[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25672939
சுப்ரியா சாஹு, இ.ஆ.ப ( அரசு கூடுதல் தலைமை செயலாளர் )
தொலைபேசி 25671875,PABX-5671
மின்னஞ்சல் hfsec@tn.gov.in
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நமது மூதாதையர் முதுமொழி ஆகும். நலமான நாடே வளமான நாடாகும். மக்கள் நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கபூர்வமான பங்கினை அளிக்க இயலும் தரமான மருத்துவ வசதிகளைப் பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நோய் தடுப்பு பணிகளிலும் நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிப்பதிலும் கவனம் செலுத்தி நலமான சமுதாயத்தை உருவாக்க நமது மாநிலம் உறுதி பூண்டுள்ளது. முக்கிய சுகாதார குறியீடுகளில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. நல்ல பொது சுகாதாரத்தை பராமரிப்பதில் அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் பராமரிப்பதில் மற்ற மாநிலங்களை விட, நமது மாநிலம் முன்மாதிரி மாநிலமாக விரைந்து முன்னேறி வருகிறது. தமிழகத்தில் 99.8 சதவிதம் பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் தகுதியும், பயிற்சியும் பெற்றவர்களால் நடத்தப்படுகிறது. இளம்பிள்ளை வாதம், தொழுநோய் மற்றும் காசநோய் போன்ற தொற்று நோய்களை ஒழிப்பதில் தமிழகம் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் ஒழிப்பிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. 2012-க்குள் தமிழகத்தை எய்ட்ஸ் இல்லா மற்றும் புதிய தொற்று இல்லா மாநிலமாக்க தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் தற்போது தனது செயல்பாட்டில் கவனம் செலுத்திவருகிறது. அதிக உயிரிழப்புக்கு காரணங்களான நீரழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்த நோய் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்று இல்லாத நோய்களை கட்டுபடுத்துதல் மீதான நமது கவனத்தை உடனடியாக ஒருமுகப்படுத்த வேண்டிய அவசியத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், வாழ்க்கை முறை மாற்றம், நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை செய்வது என்ற இரண்டு வழிகளில் மூலம் மட்டுமே நோயை கட்டுப்படுத்த இயலும்.