மாண்புமிகு திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்
பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி, கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம்
மின்னஞ்சல் : minister_bcmw[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25672172
மாண்புமிகு திரு. ஆர். காந்தி
கைத்தறி மற்றும் துணிநூல், பூதானம் மற்றும் கிராமதானம்
மின்னஞ்சல் : minister_textiles[at]tn[dot]gov[dot]in,
minister_kvi[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25674234
ஜவுளித் தொழில் இந்தியப் பொருளாதாரத்தில் தினத்தன்மை பெற்று விளங்குவதோடு, வேலை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஜவுளித் தொழிலானது தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருப்பதோடு, விவசாயத்திற்கு அடுத்தபடியாக கிராமப்புற மக்களுக்கு பெருமளவு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றது. நூற்புத் தொழில், கைத்தறி, விசைத்தறி மற்றும் பின்னலாடைத் தொழில் ஆகியவை இம்மாநில ஜவுளித் தொழிலின் நான்கு தூண்களாக விளங்குகின்றன.
கைத்தறி நெசவாளர்களின் சமூக, பொருளாதார நிலையினை மேம்படுத்துவதும், கைத்தறி, விசைத்தறி மற்றும் துணிநூல் பிரிவுகளை ஒருங்கிணைத்து செம்மைப்படுத்துவதும் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் முக்கிய நோக்கங்களாகும்.