தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானது. தற்கால இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்று காலத்துக்கு முன்பே மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு பல்லவ அரசு காலத்தியிலிருந்துதான் வரலாறு உள்ளது. சேர, சோழ, பாண்டிய பேரரசுகள், பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்களைத் தொடர்ந்து பல்லவர்கள் முக்கிய அரசாக இருந்தது. சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும், பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர்.
வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இஸ்லாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவில் மற்ற பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. 14ம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து போர்ச்சுக்கிசீயர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய வந்தனர். அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியை மசூலினிப்பட்டினம் என்ற இடத்தில் 1611ல் தொடங்கினார்கள். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் 18ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்குப் பின் மொழியின் எல்லைகளை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு வடக்கில் ஆந்திரா மற்றும் கர்நாடகமும், மேற்கில் கேரளாவும், கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தெற்கில் இந்திய பெருங்கடலும் எல்லையாக கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். 2007-2008ம் ஆண்டின் கணக்குப்படி விளைநிலங்களின் அளவு சுமார் 56.10 மில்லியன் ஹெக்டர் ஆகும். இங்கு முதன்மை உணவுப் பயிர் நெல் மற்றும் தானிய வகைகள். இது தவிர பணப்பயிர்களான கரும்பு, பருத்தி, மிளகாய், சூரியகாந்தி மற்றும் கடலைப் பயிரிடப்படுகிறது. தோட்டப்பயிர்களான தேயிலை, காப்பி, ரப்பரும் பயிரிடப்படுகிறது. உயிரின உரங்களை தயாரிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது
தமிழ்நாட்டின் முக்கிய தொழிலாக பருத்தி, கனரக வாகன தயாரிப்பு, இரயில் பெட்டி தொழிற்சாலை, உதிரிப்பாகங்கள் தயாரிப்பு, சிமெண்ட், சர்க்கரை, காகிதம் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இது தவிர தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளும் உள்ளன. மென்பொருள் தயாரிப்புக்காக சென்னை தரமணியில் மென்பொருள் தொழிற்நுட்ப பூங்கா நிறுவப்பட்டுள்ளது. சுமார் ரூ.20,700 கோடி மதிப்பிற்கு மென்பொருள் 2006-2007ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு முக்கிய கனிமங்களான பளிங்கு, கருங்கல், பழுப்பு நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவை ஏற்றுமதி பொருட்களாக உள்ளன. தோல், நூல், தேயிலை, காப்பி, புகையிலை மற்றும் கைத்தறிப் பொருட்கள், தோல் பதனிடும் தொழில் போன்றவை இந்தியாவில் அறுபது சதவிகித பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டின் மிக முக்கிய நீர்பாசனம் பெரியார் அணை, வைகை அணை, பரம்பிக்குளம்-ஆழியாறு அணை ஆகியவை உள்ளன. வைகை, தாமிரபரணி, வெள்ளாறு, பெண்ணையாறு, அமராவதி ஆகியவை ஆற்று நீர் பாசனங்களான உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்த மின் தேவை சுமார் 8,249 மெகாவாட் மின்சாரம். இதில் மாநில மின்சார தொகுப்பிலிருந்து 5,288 மெகாவாட் மின்சாரமும், தனியார் நிறுவனங்களிடமிருந்து சுமார் 1,058 மெகாவாட் மின்சாரமும், மத்திய தொகுப்பிலிருந்து 1,093 மெகாவாட் மின்சாரமும் பெறப்படுகிறது.
சாலை:- தமிழ்நாட்டில் மொத்த சாலைகளின் நீளம் சுமார் 1,93,918 கி.மீ. ஆகும்.
தொடர் வண்டி:- மொத்த தொடர்வண்டி இருப்புப் பாதை நீளம் 4,181 கி.மீ. ஆகும். இதில் முக்கிய சந்திப்புகள் உள்ள நகரம் சென்னை, மதுரை, திருச்சி, கோவை மற்றும் திருநெல்வேலி.
ஆகாய விமானம்:- தென்னிந்தியாவின் முக்கிய பன்னாட்டு விமானம் நிலையம் சென்னையில் உள்ளது. இது தவிர தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோயமுத்தூர் மற்றும் சேலத்தில் விமான நிலையங்கள் உள்ளன.
துறைமுகம்:- தமிழ்நாட்டில் மிக முக்கிய கப்பல் துறைமுகங்கள் சென்னை மற்றும் தூத்துக்குடியில் உள்ளன. இது தவிர 7 சிறிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றுள் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் முக்கியமானவை.
பரத நாட்டியம்
பொங்கல் திருவிழா அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இத்திருநாள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கு மறு நாள் ஜல்லிக்கட்டு காளை விழாவாகும். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உலக புகழ் பெற்றது. சித்திரை திருவிழா மதுரையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு விழா தமிழ் மாதமான ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி ஒன்பது இரவுகள் கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவில் பல பகுதிகளில், பல முறைகளில் கடவுளை வணங்குகின்றனர். இதன் முக்கிய குறிக்கோள் ஆற்றல், அறிவு,செல்வம் ஆகும்.
மீனாட்சி அம்மன் கோயில்,மதுரை
சென்னை, மாமல்லபுரம், பூம்புகார், காஞ்சிபுரம், கும்பகோணம், தராசுரம், சிதம்பரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மதுரை, இராமேஸ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேளாங்கன்னி நாகூர், சித்தன்னவாசல், கழுகுமலை, குற்றாலம், ஒகனேகல், பாபநாசம், சுருளி நீர் தேக்கம், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஏலகிரிமலை, முதுமலை, முண்டன்துறை, களக்காடு, வேடந்தாங்கல், அண்ணா உயிரியல் பூங்கா ஆகியவை தமிழ்நாட்டின் சில முக்கிய சுற்றுலாதலங்கள் ஆகும்
மாநில விலங்கு
நீலகிரி தாஹர்
மாநில பறவை
மரகத புறா
மாநில மலர்
பார்க்க
குளோரியோசா லில்லி
மாநில மரம்
பார்க்க
பனை மரம்
மாநில பட்டாம்பூச்சி
பார்க்க
தமிழ் யோமன்
மாநில பழம்
பார்க்க
பலாப்பழம்