green
merron
blue
brown
Blue

You are here

நிதி துறை
Contact details
Minister

திரு ஓ .பன்னீர்செல்வம்

நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச் சீட்டுகள், வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்

Secretary to Government

திரு K சண்முகம் இ.ஆ.ப ( அரசு கூடுதல் தலைமை செயலாளர் )

தொலைபேசி 25671173,PBX No-5636

துறை சுயவிபரம்

தமிழக அரசின் பொது நிதி நிருவாகப் பொறுப்பு நிதித்துறையைச் சார்ந்ததாகும். ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரித்து சட்டப் பேரவையில் தாக்கல் செய்வதில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலக் கருவூலத்தை நிருவகித்து வரும் நிதித்துறை, வரவுகளையும் செலவுகளையும் சீராகப் பராமரிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பு வகிப்பதோடு கடன் பொறுப்புகளைத் திருப்பிக் கொடுக்கும் பொறுப்பினையும் வகிக்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அரசின் நிதி இலக்குகளை எய்தும் பொருட்டும், வரவுக்கேற்றபடி செலவினங்களைச் சீர் செய்து, தேவை, செலவுக்கேற்ற பயன், வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கம், நிதி நடைமுறை, முதலியவற்றிற்கேற்ப துறைகளின் செயற்குறிப்புகளை நிதித்துறை கூர்ந்து ஆய்வு செய்கிறது.

நிதித் துறையின் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் பின்வரும் ஏழு துறைகள் இயங்கி வருகின்றன.

(i) கரூவூலக் கணக்குத் துறை

(ii) உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை

(iii) சிறு சேமிப்புத் துறை

(iv) அரசு தகவல் தொகுப்பு விவர மையம்

(v) கூட்டுறவு தணிக்கைத் துறை

(vi) தலைமை அரசுத்துறை நிறுவனத் தணிக்கைத்துறை

(vii) ஓய்வூதிய இயக்ககம்

திணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு